செஞ்சூரியன்: 
ந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் நாளை துவங்கவுள்ளது.
தென்னாப்பிரிக்கா செல்லும் இந்திய அணி தலா மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட், ஒருநாள் தொடர், அடுத்து நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது.
பாக்சிங் டே டெஸ்ட் நாளை, செஞ்சூரியனில் துவங்கி நடைபெறும். இரண்டாவது டெஸ்ட் ஜோகன்னஸ்பர்க்கில் ஜனவரி 3-7 வரை, கடைசி டெஸ்ட் ஜனவரி 11-15 வரை கேப் டவுனிலும் நடைபெறும்.
இந்திய அணி கடைசியாக 2017-18ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்க சுற்றுப் பயணம் மேற்கொண்டு, முதல் இரண்டு டெஸ்ட்களில் படுமோசமாக தோற்ற நிலையில், ஜோகனனஸ்பர்க்கில் நடைபெற்ற கடைசி போட்டியில் அபார வெற்றியைப் பெற்று, 2-1 என்ற கணக்கில் தொடரை இழந்தது. அதன்பிறகு இந்திய டெஸ்ட் அணி வெளி நாட்டு மண்ணில் சிறப்பாக  விளையாடத் துவங்கியது.
முதல் போட்டி நடைபெறவுள்ள செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்ற 26 டெஸ்ட் போட்டிகளில், தென்னாப்பிரிக்க அணி 21 போட்டிகளில் வெற்றியை பெற்றுள்ளது. 3 போட்டிகள் டிரா, 2 தோல்விகளையும் சந்தித்துள்ளது. இந்த தோல்விகளும் 2015-க்கு முன்புதான். இந்த மைதானத்தில் இந்தியா, 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலுமே தோற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.