வாஷிங்கடன்:
திக பொருட்செலவில் ‘ஜேம்ஸ் வெப்’ டெலஸ்கோப்-ஐ விண்ணில் செலுத்தியது நாசா.

இதுவரை அல்லாத அளவிற்கு பால்வளி அண்டத்தில் சூரிய குடும்பம் அல்லாத பிற கோள்களை துல்லியமாக கண்டறிய 70 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்பை விண்ணில் செலுத்தியிருக்கிறது நாசா. இந்த தொலைநோக்கியின் எடை கிட்டத்தட்ட 6000 கிலோ எனத் தெரிவித்திருக்கிறது. சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கிரகங்களின் வளிமண்டலங்களை தெளிவாக ஆய்வுசெய்ய திட்டமிட்டு நாசா ‘ஜேம்ஸ் வெப்’ தொலைநோக்கியை விண்ணில் செலுத்தியிருக்கிறது. இந்த தொலைநோக்கியின் ஆயுட்காலம் குறைந்தபட்சமாக 10 ஆண்டுகள் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த தொலைநோக்கியை நிலையான சுற்றுவட்ட பாதையில் கொண்டு சேர்க்க 30 நாட்கள் ஆகும் என்றும், அதன்பிறகு விண்வெளியில் எடுக்கப்படும் புகைப்படங்களை நாசாவிற்கு அனுப்பும் பணியை இந்த தொலைநோக்கி தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.