கிரிக்கெட் : மும்பை டெஸ்ட் போட்டியில் வலுவான நிலையில் இந்திய அணி

Must read

மும்பை

மும்பை கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை விட 332 ரன்கள் முன்னிலை பெற்று வலுவாக உள்ளது.

நேற்று மும்பை வான்கடே விளையாட்டு அரங்கில் இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 2 மற்றும் கடைசி டெஸ்ட் பந்தயம் தொடங்கியது.  போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.  இந்திய அணியில் விராட் கோலி, புஜாரா டக் அவுட் ஆனதால் அணி ஏமாற்றம் அடைந்தது.

ஆனால் துவக்க வீரர் மயங்க் அகர்வால் தனது அபார ஆட்டத்தினால் இந்தியாவுக்கு 150 ரன்கள் தேடித் தந்தார்.  அவர் அஜாஸ் படேல் பந்தில் விக்கட்டை இழந்தார்.   இந்த முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் 10 விக்கட்டுகளையும் நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல் வீழ்த்தி சாதனை புரிந்தார்.    இந்திய அணி 325 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்திய அணியின் பந்து வீச்சினால் தவித்த நியூசிலாந்து அணி  28.1 ஓவர்களில் 62 ரன்களில் அனைத்து விக்கட்டுகளையும் எடுத்தது.   இந்திய அணியில் அஸ்வின் 4 விக்கட்டுகளையும் சிராஜ் 3 விக்கட்டுகளையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கதாகும்.   இந்திய அணி நியூசிலாந்துக்கு ஃபாலோ ஆன் கொடுக்கும் என எதிர்பார்த்த நிலையில் இரண்டாம் இன்னிங்சை தொடங்கியது.

தொடக்கத்தில் 263 ரன்கள் முன்னிலையில் இருந்த இந்திய அணி இன்றைய ஆட்ட நேர முடிவில் விக்கட் இழப்பின்றி 69 ரன்கள் குவித்துள்ளது.  இதில் புஜாரா 29 ரன்களுடனும் மயங்க்ஜ் அகர்வால் 38 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.  தற்போதைய நிலையில் இந்திய அணி 332 ரன்கள் முன்னிலையில் உள்ளதால் வலுவான நிலையில் உள்ளது.

More articles

Latest article