ஹாமில்டன்: நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி 20 போட்டியில் 180 ரன்களை  வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.

இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 ஆட்டங்களிலும் அசத்திய இந்தியா, தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

3வது 20 ஓவர் போட்டி ஹாமில்டனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங்கை தேர்ந்தெடுத்தது. இதையடுத்து, இந்தியாவின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, கேஎல் ராகுல் ஆகியோர் களம் இறங்கினர்.

தொடக்கம் முதலே அதிரடி காட்டியது இந்திய அணி. முதல் 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் எடுத்திருந்தது. 6வது ஓவரில் ரோகித் சர்மா 2 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் என பதம் தமது 23 பந்தில் அரைசதத்தை எட்டி கலக்கினார். டி 20 அவரின் அதிவேக 2வது அரைசதமாகும் இது.

மறுமுனையில் ஈடுகொடுத்து ஆடிய ராகுல் 19 பந்தில் 27 ரன்கள்  சேர்த்து ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு அதிரடி வீரர் ஷிவம் டுபே களம் இறக்கப்பட்டார். 11வது ஓவரின் 4வது பந்தில்  ஹிட் மேன் ரோகித் ஆட்டமிழந்தார்.

அவர் 65 ரன்கள் குவித்தார். அந்த ஓவரின் கடைசி பந்தில் டுபே வெளியேறினார். அடுத்தடுத்து விக்கெட் வீழ்ச்சியால் தடுமாறியது இந்தியா. கடைசி கட்ட ஓவர்களில் இந்தியா ஓரளவு ரன்குவிக்க, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் சேர்த்தது.

கடைசி ஓவரில் இந்தியாவுக்கு 18 ரன்கள் வந்தன. மணிஷ் பாண்டே 6 பந்தில் 14 ரன்களும், ஜடேஜா 5 பந்தில் 10 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூசிலாந்து வெற்றி 180 ரன்கள் தேவை. இந்த ஆட்டத்தை இந்தியா வென்றால், 3-0க்கு என்ற கணக்கில் டி 20 தொடரை வென்றுவிடும்.