டெல்லி: இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 4033 ஆக அதிகரித்து உள்ளது. நேற்று ஒரே நாளில் மேலும் 410 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24மணி நேரத்தில் மேலும், 1,79,723 புதிய கோவிட் வழக்குகள் மற்றும் 146 இறப்புகள் பதிவாகியுள்ளன. அதே வேளையில் ஒமிக்ரான் பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். இதற்கிடையில், நாட்டில் உள்ள சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நோய்த்தொற்றுகள் உள்ளவர்களுக்கு வைரஸுக்கு எதிரான பூஸ்டர் தடுப்பூசி அளவை இன்று முதல் வழங்கத் தொடங்கி உள்ளது.

நாடு முழுவதும்  நேற்று 3,623 ஆக இருந்த ஒமிக்ரான் பாதிப்பு மேலும், அதிகரித்து  ஒரே நாளில் 4033 ஆக உயர்ந்துள்ளது.  ஒமிக்ரானில் இருந்து  இதுவரை 1,552 பேர் குணமடைந்துள்ளனர்.

அதிகபட்சமாக மகாராஷ்டிரால் இதுவரை 1216 பேருக்கு ஒமிக்ரான் உறுதியாகி உள்ள நிலையில் 454 பேர் மட்டுமே குணமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில், இதுவரை 185 பேர் ஒதிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அனைவரும் குணமடைந்துள்ளனர்.