டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக மேலும் 60,753 தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதே வேளையில், 1,647 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 60,753 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,98,23,546 ஆக அதிகரித்துள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட, 1,727 ஆயிரம் குறைவாக உள்ளது.
இதில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும், 1,647 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 3,85,137 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று ஒரே நாளில் 97,743 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,86,78,390 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 7,60,019 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டில் இதுவரை 27,23,88,783 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இதுவரை (ஜூன் 18 வரை) மொத்தம் 38,92,07,637 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன, இவற்றில், 19,02,009 மாதிரிகள் நேற்று பரிசோதிக்கப்பட்டன என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்து உள்ளது.