டெல்லி:  இந்தியாவில் நேற்று ஒரே நாளில்  புதியதாக மேலும் 54,069 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன்,  1,321 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா வைரசின் 2ம் அலை  வெகுவாக குறைந்துள்ளது. தற்போது  குணமடைவோரின் எண்ணிக்கை, பாதிப்பைவிட குணமடைவோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட தகவலின்படி,  கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் மேலும், 50,848 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது, நேற்றை பாதிப்பை விட இன்றைய பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,00,82,778 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 1,321 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,91,981 ஆக உயர்ந்துள்ளது.

அதே வேளையில் தொற்றின் பிடியில் இருந்து 68,885 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,90,63,740 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் குணமடைந்தவர்களின் விகிதம் 96.56 சதவீதமாக உள்ளது.

தற்போதைய நிலையில், நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 6,27,057 பேர் தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

நாட்டில் இதுவரை 30 கோடியே 16 லட்சத்து 26 ஆயிரத்து 028 டோஸ்கள் போடப்பட்டு இருப்பதாக சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள தகவலின்படி நாடு முழுவதும் ஜூன் 23 வரை மொத்தம் 39,78,32,667 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அவற்றில், நேற்று 18,59,469 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.