டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 44,658 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், 496 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை கட்டுக்குள் இருந்த நிலையில், கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகைக்கு முழு தளர்வு வழங்கிய மாநில அரசின் மெத்தனத்தால், தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 20ஆயிரம் வரை குறைந்த பாதிப்பு, தற்போது மீண்டும் 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்று 46,164 மற்றும் நேற்று முன்தினம் 37,593 ஆக பதிவாகி இருந்தது. மொத்த பாதிப்பில் 70 சதவிகித பாதிப்பு கேரளாவிலேயே பதிவாகி உள்ளது.

மத்தியஅரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 44,658 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 26 லட்சத்து 3 ஆயிரத்து 188 ஆக அதிகரித்துள்ளது.

தொற்று பாதிப்பில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில்  32 ஆயிரத்து 988 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 18 லட்சத்து 21 ஆயிரத்து 428 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், 496  பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 36 ஆயிரத்து 861 ஆக அதிகரித்துள்ளது.

தற்போதைய நிலையில், நாடு முழுவதும்  3 லட்சத்து 44 ஆயிரத்து 899 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் இதுவரை  61,22,08,542 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. நேற்று மட்டும் 79,48,439 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.