டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 44,230 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதுடன், 555 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் கடுமையான பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் உருவாக்கிய கொரோனா வைரசின் 2வது அலை தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளன. இதனால் மக்களின் வாழ்வாதாரம் திரும்பி வருகிறது.
இந்தியா முழுவதும் கடந்த கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக மேலும், 44,230 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. நேற்று முன்தினம் புதிய பாதிப்பு 43,654 ஆகவும், நேற்று பாதிப்பு 43,509 ஆகவும் இருந்த நிலையில், இன்று 44,230 பேருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தொற்று பாதிப்பு சற்று உயர்ந்துள்ளது. அதே வேளையில் குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளத
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி கடந்த 24மணி நேரத்தில் மேலும் 44,230 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதால், கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 3 கோடியே 15 லட்சத்து 72 ஆயிரத்து 344 ஆக உயர்ந்துள்ளது.
அதே வேளையில் நேற்று மட்டும் 42,360 பேர் குணமடைந்துள்ளதால், இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 7 லட்சத்து 43 ஆயிரத்து 972 ஆக உயர்ந்து உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 555 பேர் உயிரிழந்து உள்ளனர். இதன்மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,23,217 ஆக உள்ளது.
தற்போதையை நிலையில், கொரோனா பாதிப்புகளுக்கு 4 லட்சத்து 5 ஆயிரத்து 155 பேர் நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்று 4 லட்சத்து 3 ஆயிரத்து 840 ஆக இருந்தது.
நாடு முழுவதும இதுவரை மொத்தம் 45 கோடியே 60 லட்சத்து 33 ஆயிரத்து 754 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.