டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் ஏற்றம் இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த இரு நாட்களாக குறைந்து வந்த தொற்று பரவல், நேற்று மேலும் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 43,263 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர், தொற்று காரணமாக  338 பேர் பலியாகி உள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி )இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில்)  நாட்டில் கொரோனாவால் புதிதாக  43,263 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,31,39,981ஆக உயர்ந்தது.

நேற்று ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி  புதிதாக 338 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,41,749 ஆக உயர்ந்தது. 1.33 சதவிகிதம் அளவில் உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தொற்றில் இருந்து ஒரே நாளில்  40,567 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம்  குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,23,04,618 ஆக உயர்ந்துள்ளது. 97.48 சதவிகிதமாக உள்ளது.

தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,93,614பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதாவது 1.19 சதவிகிதமாக உள்ளது.

இந்தியாவில் இதுவரை 71,65,97,428 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஒரே நாளில் 86,51,701 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.