டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,982 பேருக்கு கொரோனா பாதிப்பு – 533 பேர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடு முழுவதும் நாடு முழுவதும்  கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 42,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 533 பேர் ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து வருகிறது. நாட்டின் மொத்த பாதிப்பில் 50சதவிகிதம் கேரளாவில் உள்ளது. அதே வேளையில் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகளும் தீவிரமெடுத்து வருகிறது. இதன் காரணமாக கடந்த மாதத்தில் தொற்று எண்ணிக்கை குறையத் தொடங்கியது. தற்போது மீண்டும் சற்று அதிகரித்து உள்ளது.  இருந்தாலும்,  அனைத்து மாநிலங்களிலும், தளர்வுகளுடன் ஊரடங்கு தொடர்ந்து நீடித்து வருகிறது.  மேலும் கொரோனா 3வது அலை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும், அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று பெருந்தொற்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மூன்றாம் அலை வருவதற்குள் நாட்டில் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசிகளை செலுத்த வேண்டும் என்பதை அரசு நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும்ட புதிதாக 42,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,18,12,114 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளல்  533 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை நாட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,26,290 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 41,726 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,09,74,748  ஆக உயர்ந்துள்ளது.

தற்போது,  4,11,076 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 37,55,115 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மொத்தமாக இந்தியாவில் தற்போது வரை 48,93,42,295 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.