டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 42,625 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. அத்துடன் 36,668 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளதுடன் 562 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா 3வது அரை பரவத்தொடங்கி இருப்பதாக செய்திகள் பரவிய நிலையில், 2வது அலையே இன்னும் முடிவுக்கு வரவில்லை என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்து உள்ளார். இந்த நிலையில், நாடு முழுவதும் மீண்டும் தொற்று அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடு முழுவதும், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 42,625 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,17,69,132 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று 562 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். இதன்மூலம் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,25,757 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தொற்றின் பிடியில் இருந்து 36668 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,09,33,022 ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலையில் நாடு முழுவதும் 4,10,353 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் இதுவரை 48,52,86,570 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.