டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,154 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாகவும், 724 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி,  கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 37,154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை, நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு  3,08,74,376 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு புதிதாக 724 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,08,764 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தொற்றில் இருந்து  39,649 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை  குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,00,14,713  ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,50,899 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் இதுவரை 37,73,52,501 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.