சுவா

பிஜி நாட்டு அரசுப் பணிகளில் கொரோனா தடுப்பூசி போடாதோர் தொடர முடியாது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் உலகையே கடுமையாக அச்சுறுத்தி வருகிறது.  இதுவரை உலக அளவில் 18.76 கோடி பேர் பாதிக்கப்பட்டு 40.49 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர்.    இதுவரை 17.15 கோடி பேர் குணமாகி உள்ளனர்.  தற்போது 1.19 கோடி பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனா பரவலைத் தடுக்க ஒரே வழி கொரோனா தடுப்பூசி மட்டுமே என்பதால் பல உலக நாடுகளிலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.   இவற்றில் தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான பிஜி நாடும் ஒன்றாகும்.

பிஜி நாட்டுப் பிரதமர் பிரான்க் பைனிமராமா,  ”நாட்டில் கொரோனா தடுப்பூசி போடாதோருக்கு அரசு பணி இல்லை. என்பதால் தடுப்பூசி போடாதோர் அரசுப் பணியில் தொடர முடியாது,  வரும் ஆகஸ்ட் 15க்குள் முதல் டோஸ் தடுப்பூசி போடாத அராஉ ஊழியர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள்.

அரசு ஊழியர்கள் அனைவரும் வரும் நவம்பர் 1 ஆம் தேதிக்குள் இரண்டு டோஸ் தடுப்பூசிகள் கட்டாயம் போட வேண்டும்.  அவ்வாறு போடாத அரசு ஊழியர்கள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்படுவார்கள்” என ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.