டில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,662  பேருக்கு புதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட உள்ளது.  33,798 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர் என  என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மநபணப சுகாதார அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் ,  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 35,662 பேருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,34,17,390 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில்இருந்து மேலும் 33, ஆயிரம் பேர் நலம் அடைந்துள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,26,32,222 ஆக அதிகரித்து உள்ளது.

தற்போது, 3,40,639 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் நேற்று மட்டும் 14,48,833 மாதிரிகள் கோவிட் பரிசோதனைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இதன் மூலம் பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 55,07,80,273 ஆக உயர்ந்தது.

நாடு  முழுவதுழம் 2.5 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு இதுவரை மத்திய அரசு இலவசமாக 78,02,17,775 டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு உள்ளது. இன்னும் கூடுதலாக 33,08,560 டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளன.

மாநில அரசுகள் மற்றம் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில், 6,02,70,245 டோஸ் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.