டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 3,37,704 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. அதே வேளையில் ஒமிக்ரான் பாதிப்பும் 10,050 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,37,704 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இது நேற்றை விட 9,550 குறைவு. அதே வேளையில், இதுவரை கண்டறியப்பட்ட மொத்த ஓமிக்ரான் வழக்குகள் 10,050; நேற்றை விட 3.69% அதிகரித்துள்ளது.

இந்தியாவில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,050ஆக அதிகரித்துள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்புகள் குறித்து அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதன்படி, நேற்று ஒரே நாளில்  புதிதாக 3,37,704 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,89,03,731ஆக உயர்ந்தது.

சிகிச்சை பலனின்றி புதிதாக 488 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம், , நாட்டின் மொத்த உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,88,884 ஆக உயர்ந்தது. உயிரிழந்தோர் விகிதம் 1.27% ஆக குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தொற்றில் இருந்து  2,42,676 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம், குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,63,01,482 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 93.50% ஆக உயர்ந்துள்ளது

தற்போது நாடு முழுவதும்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 21,13,365 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  சிகிச்சை பெறுவோர் விகிதம் 5.23% ஆக குறைந்துள்ளது. தினசரி நேர்மறை விகிதம்: 17.22%/

இந்தியாவில் 1,61,16,60,078 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 67,49,746 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நேற்று மட்டும் 19,60,954 மாதிரிகள் சோதனை நடத்தப்பட்டு உள்ளது. இதுவரை  71,34,99,892* மாதிரிகள் சோதனை நடத்தப்பட்டு உள்ளது.