டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 29,689 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதுடன், 415 பேர் உயிரிழந்து உள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலையின் தாக்கம் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், 3வது அலை எதிர்கொள்ள மத்திய மாநில அரசுகள் தயாராகி வருகின்றன. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாக்கப்பட்டு வருகிறது.  தினசரி கொரோனா பாதிப்பில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்கள் இருந்து வருகின்றன.  நேற்றைய பாதிப்பு 30ஆயிரத்துக்கும் கீழே குறைந்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி,  கடந்த 24 மணி நேரத்தில் 29,689 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 132- நாட்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. மொத்த பாதிப்பு 3,98,100 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 415-பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,21,382- ஆக உயர்ந்துள்ளது.

நகடந்த 24 மணி நேரத்தில் 42,363 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை  3,06,21,382 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 3,98,100- ஆக குறைந்துள்ளது.

சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 124- நாட்களுக்குப் பிறகு 4 லட்சத்திற்கு கீழ் வந்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 44,19,12,395 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.