டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 29,616 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுஉள்ளது. இது நேற்று முன்தினம் பதிவான பாதிப்பை விட 5.6% குறைவு என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை (8மணி வரையிலான நிலவரம்) வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடு முழுவதும் [பதிதாக மேலும் 29,616 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,36,24,419 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் சிகிச்சை பலன்றி மேலும் 290 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 4,46,658 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 28046 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 32876319 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 97.78% ஆக உள்ளது.
தற்போதைய நிலையில் நாடு முழுவதும் 3,01,442 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் நேற்று ஒரு நாள் மட்டும் 71,04,051 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது./ இதுவரை 84,89,29,160 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.