டெல்லி: இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 2,81,386 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 4,106 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. தொற்று பரவலை தடுக்கும் வகையில், தடுப்பூசி போடும் பணியும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. மேலும், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 2,81,386 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 4,106 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,49,65,463 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,74,390 ஆகவும் அதிகரித்துள்ளது.
மேலும், ஒரே நாளில் 3,78,741 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 2,11,74,076 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 35,16,997 ஆக குறைந்துள்ளது. நேற்று முன்தினம் 3.26 லட்சம், நேற்று 3.11 லட்சமாக இருந்த பாதிப்பு இன்று 2.81 லட்சமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் இதுவரை 18,29,26,460 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.