திருவனந்தபுரம்

வ் தே புயல் தீவிரமாகி உள்ளதால் கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அரபிக்கடலில் உருவாகி உள்ள டவ்தே புயல் தீவிரம் அடைந்துள்ளது.  இதனால் கேரள மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.   அணைகள் நிரம்பி வழிகின்றன.  பல இடங்களில் வெள்ளம் மற்றும் மழையால் மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இவ்வாறு பாதிப்படைந்த 2000க்கும் அதிகமானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  கடும் மழை காரணமாக மூணாறு – குமுளி பாதையில் ஒரு மரம் முறிந்து கார் மீது விழுந்ததில் ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.  மழை மேலும் வலுக்கும் எனக் கூறப்படுகிறது.

இதையொட்டி கோழிக்கோடு, கண்ணூர், மலப்புரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  அத்துடன் வயநாட்டில் ஓடும் ஆறுகளில் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் ஆறுகளில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.