டெல்லி: இந்தியாவில் கொரோனா 2வது அலை கோரத்தாண்டவமாடுகிறது. கடந்த 24 மணி நேரத்தில்,   மேலும் 2,63,533 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதுடன்,  4,329 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த வாரம் தினசரி பாதிப்பு 3 லட்சத்தை கடந்த நிலையில், தற்போது சற்று குறைந்து வருகிறது.

நாடு முழுவதும் கொரோனா பரவலின் 2வது அலை உச்சம்பெற்றுள்ளது. மகாராஷ்டிரா, தமிழகம், குஜராத், கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கான உள்பட பல மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக முழு ஊரடங்கு சில தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர கடும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இருந்தாலும் தொற்று பரவலும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,63,533 பேருக்கு தொற்று உ றுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,52,28,996 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 4,329 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 2,78,719 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளையில், கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து 4,22,436 பேர் விடுபட்டுள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 2,15,96,512 ஆக அதிகரித்து உள்ளது.

தற்போதைய நிலையில்,33,53,765 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் இதுவரை 18,44,53,149 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் நேற்று கொரோனா வைரசால் புதிதாக 33,075 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 16,31,291 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 6,150 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 4,44,371 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இன்று 335 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18,005 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து இன்று 20,486 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 13,81,690 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,56,278 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

இதுவரை சோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 2,52,73,493 ஆக உள்ளது. மேலும், தற்போது 2,31,596 பேர் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.