21/09/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 26,115 பேருக்கு கொரோனா பாதிப்பு… 34,469 பேர் டிஸ்சார்ஜ்…

Must read

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 26,115 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதுடன்,  34,469 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்து வருகிறது. அதே வேளையில் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மத்திய சுகாதாரத்துறை  இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 26,115 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3,35,04,534 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 252 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு 4,45,385 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 34,469 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,27,49,574 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில் நாடு முழுவதும் 3,09,575 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

நாடு முழுவதும் இதுவரை 81,85,13,827  பேருக்குதடுப்பூசி போடப்பட்டு உள்ளது. நேற்று ஒரே நாளில் 96,46,778  பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

More articles

Latest article