டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 18,870 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாக இருப்பதுடன், தொற்று காரணமாக 378 பேர் உயிரிழந்துள்ளனர். அதே வேளையில் 28,178 பேர் குணமடைந்துள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை (8மணி வரையிலான நிலவரம்) வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும்,  18, 870 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதில் 11,196 பேர் கேரளாவில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,37,16,451 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி  378 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை  4,47,751 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 28,178  பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,29,86,180 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில், நாடுமுழுவதும் கொரோனா தொற்றுக்கு த 2,82,520 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 54,13,332 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இதுவரை 87,66,63,490 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 15,04,713 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 56,74,50,185 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.