டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் கொரோனாவால் 1.73 லட்சம் பேர் பாதிப்பு, 3617 பேர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக தினசரி பாதிப்பு 2 லட்சத்தை கடந்த நிலையில், இன்று மீண்டும் 2 லட்சத்துக்கும் கீழே குறைந்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி,
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் மேலும் 1,73,790 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். *இதன் மூலம், நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,77,29,247 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில், தொற்று பாதிப்பில் இருநிது 3,617 பேர் உயிரிழந்த நிலையில், , நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,22,512 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 2,84,601 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், இதுவரை, நாட்டில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,51,78,011 ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,2,28,724 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாடு முழுவதும் இதுவரை 20,89,02,445 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]