டெல்லி: இந்தியாவில் கொரோனா பரவலின் 2வது அலை குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1.32 லட்சம் பேர் பாதிக்கப்பட்டதுடன், 3,207 பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் புதிதாக 1,32,788 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,83,07,832 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் மட்டும் மேலும் 3,207 பேர் கொரோனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 3,35,102 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், தொற்றில் இருந்து 2,31,456 பேர் குணமடைந்துள்ளதுடன், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 2,61,79,085 ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலையில், நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக 17,93,645 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாடு முழுவதும் இதுவரை 21,85,46,667 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 35,00,57,330 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு உள்ளது. நேற்று மட்டும் 20,19,773 மாதிரிகள் சோதனை நடத்தப்பட்டு உள்ளது என ஐசிஎம்ஆர் தகவல் தெரிவித்து உள்ளது.