டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறையத்தொடங்கி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,32,364 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதுடன் 2713 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா 2வது அலையின் தாக்கம் கடந்த மே மாதம் நாடு முழுவதும் உச்சபட்ச தாக்கத்தை ஏற்படுத்தியது. தினசரி பாதிப்பு 3லட்சத்தை கடந்ததுடன், நோயாளிகளுக்கு தேவை யான மருந்துகள், ஆக்சிஜன் பற்றாக்குறையும் ஏற்பட்டது. இதனால் உயிரிழப்புகளும் தினசரி 4 ஆயிரத்தை தாண்டி வந்தது. இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் எடுத்த தீவிர தடுப்பு நடவடிக்கை, தடுப்பூசி போடும் பணிகள் தீவிரம் காரணமாக தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 1,32,364 பேர் புதியதாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மொத்த 2,85,74,350 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் தொற்று பாதிப்பில் இருந்து 2,07,071 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை நாடு முழுவதும் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை  2,65,97,655 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் மேலும் 2713 பேர் உயிரிழந்துள்ளதுடன், இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 3,40,702 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில், நாடு முழுவதும்  16,35,993 சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை 22,41,09,448 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.