டெல்லி: இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு நேற்றை விட சற்று குறைந்து 1260 ஆக பதிவாகி உள்ளது. 24 மணி நேரத்தில் தொற்று பாதித்த 83 பேர் உயிரிழந்த நிலையில், ஆயிரத்து 404 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி  நேரத்தில்  1,260 பேருக்கு கொரோனா தொற்று  இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நேற்று  1,335 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று தொற்று எண்ணிக்கை சற்று குறைந்து காணப்படுகிறது. தினசரி பெருந்தொற்று பாதிப்பு விகிதம் 0.24% ஆக உள்ளது.

கடந்த 24மணி நேரத்தில் மேலும் 83 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதன் மூலம் கொரோனவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,21,264 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் தொற்று பாதிப்பில் இருந்து 1,404 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் 4 கோடியே 24 லட்சத்து 92ஆயிரத்து 326 ஆக உள்ளது.

தற்போது, நாடு முழுவதும் 13 ஆயிரத்து 445  பேர்  சிகிச்சையில் இருந்து வருகின்றனர். (0.03%)

நாடு முழுவதும் இதுவரை 1,84,52,44,856 பேர் தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளனர்.