டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 12,514 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதுடன், 12,718 குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 251 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி (காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில்) நாடு முழுவதும் புதிதாக 12,514 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு 3,42,85,814ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் மேலும் 251 பேர் உயிரிந்துள்ளதுடன் சேர்த்து இதுவரை 4,58,437 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 12,718 பேர் குணமடைந்துள்ளனர். தனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,36,68,560ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் தற்போது 1,58,817 பேர் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்னர்.
இந்தியாவில் இதுவரை 1,06,31,24,205 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று 12,77,542 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
[youtube-feed feed=1]