டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,20,529 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், மேலும் 3,380 பேர் உயிரிழந்துள்ளனர். அதேவேளையில் நேற்று ஒரே நாளில் 1,97,894 பேர் குணமடைந்துள்ளனர்.
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 1,20,529 பேர் புதியதாக பாதிக்கப்பட்டு உள்ளதுடன், இதுவரை மொத்த பாதிப்பு 2,86,94,879 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளல் 3380 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதால், இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 3,44,082 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து 1,97,894 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 2,67,95,549 ஆக அதிகரித்துள்ளது.
தற்போதைய நிலையில், 15,55,248 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாடு முழுவதும் இதுவரை 22,78,60,317 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.