டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,197 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளனர். இது கடந்த 527 நாட்களுக்கு பிறகு குறைந்த அளவிலான பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும்,  நேற்று  301 உயிரிழந்துள்ள நிலையில், 12,134 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், புதிதாக மேலும்  10,197 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,44,66,598 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் மேலும்  301 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.  இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,64,153 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.35% ஆக குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில்,  மேலும் 12,134 பேர் தொற்றில் இருந்து  குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3 3,38,73,890 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.28% ஆக உயர்ந்துள்ளது

தற்போது நாடு முழுவதும்கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,28,555 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.37% ஆக குறைந்துள்ளது. இது கடந்த 527 நாட்களில் குறைவானது.

இந்தியாவில்  கடந்த 24 மணி நேரத்தில் 67,82,042 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை  1,13,68,79,685  பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நேற்று 12,42,177, சோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன. இதுவரை  62,70,16,336* சோதனைகள் நடத்தப்பட்டு உள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்து உள்ளது.