டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 2,706 பேருக்கு கொரோனா பாதிப்பு  உறுதியான நிலையில், 25 பேர் உயிரிழந்துள்ளனர். 2,070 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்துவெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

அதன்படி, புதிதாக மேலும்  2,706 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,31,55,749 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று மேலும் 25 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம்,  நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,24,611 ஆக உயர்ந்தது. உயிரிழந்தோர் விகிதம் 1.22% ஆக குறைந்துள்ளது.

கடந்த 24மணி நேரத்தில் 2,070 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் இதன் மூலம்,  குணமடைந்தோர் எண்ணிக்கை 4,26,13,440 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.74% ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு 17,698 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.04% ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை  1,93,31,57,352 கோடி டோ1 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 2,28,823 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.