புதுடெல்லி:
அரசு சொத்துகளைத் தனியாருக்குக் குத்தகை விடும் முடிவுக்குக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அரசு சொத்துகளைத் தனியாருக்குக் குத்தகைக்கு விடும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ‘நாடு விற்பனைக்கு’ என்ற ஹேஷ்டேக் மூலம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில், முதலில் மனசாட்சியை விற்றார்கள், தற்போது தேசத்தை விற்கப் பார்க்கிறார்கள் என்று பதிவிட்டுள்ளார்.
ராகுல் காந்தியின் இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி காங்கிரசாரும் மத்திய அரசுக்குத் தொடர்ந்து கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
Patrikai.com official YouTube Channel