டெல்லி: இந்தியாவின் பெயரை ‘பாரதம்’ என பெயர் மாற்ற பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான நடவடிக்கை தொடங்கி உள்ளது. அதற்கு சான்றதாக, ஜி20 கூட்டம் தொடர்பான அழைப்பில், பாரத குடியரசு தலைவர் என அழைப்பிதழ் அச்சிடப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, தற்போது பிரதமர் மோடிடியின் வெளிநாட்டு பயணத்திட்டத்திலும் ‘பாரத்’ பிரதமர் என்ற அச்சிடப்பட்டு உள்ளது. இதன்மூலம் இந்தியாவின் பெயர் பாரதம் என மாற்றப்படுவது உறுதியாகி உள்ளது.
இந்தியா என்கிற பாரதத்தை பரத சக்கரவர்த்தி, காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை சிந்து நதியிலிருந்து பிரம்மபுத்ரா நதி வரை உள்ள எல்லா பிரதேசங்களையும் ஒரு குடையின் கீழ் ஆண்டார். அதனால் இந்த பிரதேசம் ‘பாரதம்’ என்றும் ‘பாரத்வர்ஷ்’ என்றும் அழைக்கப்பட்டதாக இந்திகாசங்களில் கூறப்படுகிறது. இந்த பாரத பூமி புண்ணிய பூமி, கர்ம பூமி என்றும் கடவுள்கள் அவதரித்ததுடன் இல்லாமல் தொடர்ந்து மகான்களும் சித்தர்களும் அவதரித்து வரும் பூமியாக பாரதம் திகழ்கிறது. இந்த மண்ணில் (பாரத்தில்( த தோன்றிய சமயங்கள் அனைத்துமே இந்து மதத் தொடர்பில் உருவானவை என வரலாறுகள் தெரிவிக்கின்றன. அதற்கான சான்றுகளாக நோடு முழுவதும் பரந்து விரிந்து காணப்படும் கோவில்களும், ஆன்மிக ஸ்தலங்களுமே சாட்சி. ஆனால், பின்னால் படையெடுத்து வந்த முகலாயர்கள், வெள்ளையர்களால் பாரத்தின் மான்பு அழிக்கப்பட்டதுடன், அதன் பெயர் மாற்றப்பட்டு, சாதி சமய வேறுபாடுகளும் தோற்றுவிக்கப்பட்டதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், இந்தியாவின் பெயரை மீண்டும் பாரதம் என மாற்ற பிரதமர் மோடி தலைமையிலான மத்தியஅரசு முடிவு செய்துள்ளது. அதற்கான கேள்விகள் இடம்பெறாத சிறப்பு கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, இந்திய பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் இம்மாதம் 18 தொடங்கி 22 வரை நடக்க இருக்கிறது.
இந்த கூட்டத்தொடரில் நமது நாட்டின் பெயரை “இந்தியா” என்பதற்கு பதிலாக “பாரத்” என மாற்றுவது குறித்து மசோதா தாக்கல் செய்யப்படலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன. இதற்கிடையில், இந்த கூட்டத்தொடரில், அனைத்து கட்சி உறுப்பினர்களும் கலந்துகொள்ள வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்படும்” என பாராளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, தெரிவித்துள்ளார்.
ஜி20 உச்சி மாநாட்டிற்கு வரும் தலைவர்களுக்கு இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு விருந்தளிக்க உள்ளார். இதற்கான அழைப்பிதழில் அவரை குறிப்பிடும் இடத்தில், “இந்தியாவின் ஜனாதிபதி” என்பதற்கு பதிலாக “பாரத்தின் ஜனாதிபதி” என குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை குறிப்பிட்டு, அகில இந்தியா காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம் செய்துள்ளார்.
ஆனால், பாஜகவினரோ, ‘பாரத்’ என்பது நமது நாட்டின் தொன்மையான கலாசாரத்தை குறிப்பதாக உள்ளது. ஆனால் ‘இந்தியா’ என்பது நம்மை அவமானப்படுத்த பிரிட்டிஷ்காரர்களால் உபயோகப்படுத்தப்பட்ட வார்த்தை. அதை மீண்டும் ‘பாரத்’ என மாற்ற வேண்டும்” என கூறி வருகின்றனர்.
“மக்கள் புரிந்து கொண்டாலும் புரிந்து கொள்ளவில்லை என்றாலும் நாம் ‘இந்தியா’ என நம் நாட்டை அழைக்க கூடாது. அதற்கு பதிலாக ‘பாரத்’ என அழைக்க தொடங்க வேண்டும்,” என ராஷ்ட்ரீய சேவா சங்கம் எனப்படும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் சமீபத்தில் தெரிவித்திருந்த நிலையில், மத்தியஅரசு, இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்ற முனைந்து வருகிறது.
ஏற்கனவே ஆகஸ்டு 15ந்தேதி அன்று சுதந்திர தின உரையாற்றி பிரதமர் நரேந்திர மோடி, “வெள்ளையர்களின் ஆதிக்க ஆட்சியின் விளைவாக ஏற்பட்ட அடிமை மனப்பான்மை, சுதந்திரம் பெற்றும் நமக்கு நீங்கவில்லை. அதனை நீக்கும் முயற்சியாக பல முடிவுகளை எடுக்க வேண்டும். இந்த ‘அம்ருத் கால்’ காலகட்டத்தில் நாம் எடுக்கும் முடிவுகள் அடுத்த 1000 ஆண்டுகளுக்கான பயணிக்கும் திசையை நாட்டுக்கு காட்டுவதாக இருக்கும்” என கூறியிருந்த நிலையில், தற்போது நாட்டின் பெயரை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை தொடங்கப்பட்டு உள்ளது.
இதை மேலும் உறுதி செய்யும் பிரதமரின் வெளிநாட்டு பயண நிகழ்வுகளில் பாரத பிரதமர் என அச்சிடப்பட்டு உள்ளது.
இதற்கிடையில், மத்திய பாஜக அரசுக்கு எதிராக திரண்டுள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா (I.N.D.I.A) என்ற பெயர் வைத்துள்ளதும், அதன் காரணமாகவே மத்தியஅரசு நாட்டின் பெயரையே மாற்ற முன்வந்துள்ளது என்றம் விமர்சனம் எழுந்துள்ளது.
இந்தியா (I.N.D.I.A வார்த்தையை வைத்தே எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடியையும், மத்திய பாஜக அரசையும் கடுமையாக விமர்சித்து வருவதால், நாட்டின் பெயரையே விமர்சிப்பதாக பலர் கூறி வரும் நிலையில், இந்தியா என்ற வார்த்தைக்கு மாற்றாக இருக்கும் பாரத் என்ற வார்த்தையை பயன்படுத்த மத்தியஅரசு முடிவு செய்துள்ளது. அதன் காரணமாக, குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து வெளியான அறிவிப்பிலும், இப்போது பிரதமர் மோடி இந்தோனேஷியா மேற்கொள்ளும் சுற்றுப் பயணம் தொடர்பான அறிவிப்பிலும் இந்தியா என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக பாரத பிரதமர், பாரத குடியரசுத் தலைவர் என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மத்தியஅரசின் இந்த நடவடிக்கைகளை திமுக உள்பட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். எதிர்க்கட்சிகளின் கூட்டணிகள் வைத்திருக்கும் பெயர் என்ற ஒரே காரணதிற்காக ஒருநாட்டின்பெயரையே மாற்றும் அளவுக்கு பாஜக வந்திருக்கிறது என்றால் அவர்களுக்கு இப்போதே தோல்வி பயம் தெரிய தொடங்கிவிட்டதாக விமர்சித்து வருகின்றனர்.
வரும் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்தியாவுக்கு பதிலாக பாரதம் என்று நாட்டின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.