டெல்லி: இந்த மாதம் (நவம்பர்) தென்மாநிலங்களில் வழக்கமான மழையை விட 123% மழை பொழிவு அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இன்றுமுதல் அடுத்த இரண்டு நாட்கள் மாநிலத்தின் பல மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, வரும் 7ந்தேதி முதல் 11ஆம் தேதி வரை கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், ராமநாதபுரம், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.
தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15ந்தேதி தொடங்கி உள்ளது. இதைத்தொடர்ந்து அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்களில் நீர் மட்டம் உயர்த்து வருகிறது. இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை நவம்பர் மாதத்தில் இயல்பை விட அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே வங்கக்கடலில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு பகுதிகளும் உருவாகி மழை பெய்து வரும் நிலையில், அது மேலும் அதிகரிக்கும் அதனால், மழைப்பொழிவு அதிகம் இருக்கும் என எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று (நவம்பர் 1) திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், ராமநாதபுரம், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (நவம்பர் 2) நாமக்கல், தர்மபுரி, அரியலூர், பெரம்பலூர், கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதி., நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், தூத்துக்குடி ஆகிய இடங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ,
நாளை மறுதினம் (03.11.2024) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, அதன்பின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் நவம்பர் 4, 5,6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, வரும் 7ந்தேதி முதல் 11ஆம் தேதி வரை கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 33 டிகிரி செல்சியசை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
இன்று மற்றும் நாளை தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 கிலோ மீட்டர் முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கி.மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அரபிக்கடல் பகுதிகளில் இன்று மற்றும் நாளை கேரள கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 கிலோ மீட்டர் முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் இன்றும், நாளையும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.”
123 சதவிகிதம் அதிக கனமழைக்கு வாய்ப்பு
மேலும், இந்த மாதத்தில் வடகிழக்கு பருவமழை பெய்யும் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளாவில் நவம்பர் மாதத்தில் இயல்பை விட கூடுதலாக மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. நவம்பர் இரண்டாவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும் இதனால், தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்களில் நவம்பரில் 123 சதவீதம் அதிக மழை பெய்யும்.
தென்னிந்திய பகுதிகளில் இந்த ஆண்டு இயல்பை விட அதிக மழை நவம்பர் மாதத்தில் பெய்யும் என குறிப்பிட்டுள்ளதுடன், நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் தமிழகத்தில் இயல்பான அளவு மழை பெய்யும் என்றும் ஒரு சில இடங்களில் இயல்புக்கு குறைவான அளவில் மழை பதிவாகும் , நவம்பர் இரண்டாவது வாரத்தில் படிப்படியாக மழையின் அளவு அதிகரித்து இயல்பை விட அதிக மழைப்பொழிவு பதிவாகும் என எச்சரித்துள்ளது. அதாவது நவம்பர் 2வது வாரத்தில், மழை பொழிவு இயல்பை விட 23 சதவீதம் அதிகமாக பெய்யும் என தெரிவித்துஉள்ளது.
நவம்பர் முதல் வார இறுதியில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழ்நாட்டை நோக்கி நகர வாய்ப்புள்ளது, இதனால் கடும் மழை பெய்யும் என்றும் எச்சரித்துள்ளது.