டெல்லி: இந்தியாவில் விரைவில் பறக்கும் பேருந்துகள் இயக்கப்படும் என மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துஉள்ளர்.

தலைநகர் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின் கட்கரி, பெட்ரோல் டீசலுக்கு பதிலாக எத்தனால் உற்பத்தி அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர்,  பலவகை எரிபொருட்களில் இயங்கும், பிஃளக்ஸ் என்ஜின்களை தயாரிக்கும்படி வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். 6 மாதத்துக்குள் இந்த வகை என்ஜின்களை தயாரிப்பதாக டொயாட்டோ, ஹூண்டாய், சுசுகி ஆகிய நிறுவனங்கள் உறுதி அளித்துள்ளன என்று தெரிவித்தார்.

மேலும்,  டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களில் போக்குவரத்து மற்றும் மாசுபாட்டை குறைப்பதற்கான வழிகளை ஆய்வுசெய்து வருகிறோம். டீசல் பேருந்துகளை இயக்குவதால் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிப்படைந்து வருகிறது. ஆகையால், இந்தியாவில் விரைவில் பறக்கும் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது மெட்ரோ ரெயில் போன்ற போக்குவரத்து அமைப்பாகும்.

மணிக்கு சுமார் 100 கி.மீ. வேகத்தில் இந்த பேருந்துகளில் பயணிக்கலாம். இந்தியாவின் முதல் பறக்கும் பேருந்து டெல்லி மற்றும் அரியானாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் விரைவில் இயக்கப்பட உள்ளது. இத்திட்டம் வெற்றி பெற்றால் நாட்டின் அனைத்து பெருநகரங்களுக்கும் பறக்கும் பேருந்துகள் திட்டம் விரிவுபடுத்தப்படும் என தெரிவித்தார்.