புனே: இங்கிலாந்துக்கு எதிரான இறுதி ஒருநாள் போட்டியில், இந்திய அணி குறுகிய இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து வருகிறது. தற்போதைய நிலையில் 160 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.
இதனால், இந்திய அணி சவாலான இலக்கை நிர்ணயிக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ரோகித் ஷர்மா ஆட்டமிழந்த சிறிதுநேரத்தில், தவான் 67 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். பின்னர், விராத் கோலி 7 ரன்களில் பெளல்டு ஆனார்.
இதனையடுத்து, ரிஷப் பன்ட் உடன் இணைந்தார் கேஎல் ராகுல். கடந்த போட்டியைப் போலவே, இரண்டு விக்கெட் கீப்பர்களும் வெளுத்துக் கட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கேஎல் ராகுல் 7 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்திய அணி பெரிய நெருக்கடியில் சிக்கியது.
தற்போது, பன்ட் உடன் ஹர்திக் பாண்ட்யா சேர்ந்துள்ளார். தற்போது, இவர்கள் இருவரையும்தான் இந்திய அணி பெரியளவில் நம்பியுள்ளது. இவர்கள் இருவரும் பெரிய இன்னிங்ஸ் ஆடாவிட்டால், இந்திய அணியின் ரன் எண்ணிக்கை கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உள்ளது. ரிஷப் பன்ட் 42 ரன்கள் எடுத்து ஆடிவருகிறார்.
இந்திய அணி, தற்போதுவரை தனது 4 விக்கெட்டுகளையும், இங்கிலாந்தின் சுழற்பந்து வீச்சாளர்களிடம் இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.