ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டி-20 கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
ஜிம்பாப்வேவின் ஹாரரே மைதானத்தில் நடந்த போட்டியில், இந்திய அணி டாஸ் வென்றது.   .  ஜிம்பாப்வே அணியை பேட்டிங் செய்ய இந்திய அணி பணித்தது. ஜிம்பாவே அணி  20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்தது.   அதிகப்பட்சமாக அந்த அணியின் சிகும்புரா 54 ரன்கள் எடுத்தார்.
india_lostt
171 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்தன.    வெற்றிக்காக போராடிய மணிஷ் பாண்டே 48 ரன்களில் ஆட்டமிழந்தார்.
20 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்கள் மட்டுமே எடுத்து 2 ரன்களில் தோல்வி அடைந்தது.