புதுடெல்லி: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், விரைவான பரிசோதனை முடிவுகளைப் பெறும் வகையிலான கருவிகளை கண்டறிவதற்காக, இந்தியா – இஸ்ரேல் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து செயல்படவுள்ளதாக இஸ்ரேல் தூதரக தகவலகள் தெரிவிக்கின்றன.
இந்தக் கருவிகளின் மூலமாக, கோரோனா பரிசோதனை முடிவுகளை வெறும் 30 விநாடிகளில் அறிந்துகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
“வரும் வாரங்களில், இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம், சுகாதார அமைச்சகம் போன்றவை, இந்தியாவுடன் இணைந்த கோவிட்-19 தடுப்புக்கான ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ளும்” என்று அந்நாட்டு தூதரகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் பாதுகாப்பு, ஆராய்ச்சி & மேம்பாட்டுத் துறையின் உயர்மட்ட குழுவினர், ஒரு சிறப்பு விமானத்தின் மூலம், விரைவில் இந்தியா வரவுள்ளதாகவும், அவர்கள், இந்தியாவின் முதன்மை விஞ்ஞானி விஜய ராகவன் மற்றும் பாதுகாப்புத்துறை ஆய்வாளர்களுடன் இணைந்து தங்கள் ஒத்துழைப்பை மேற்கொள்வார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.