டில்லி:

இந்தியா-இஸ்ரேல் இடையே பாதுகாப்பு உள்பட 9 முக்கிய ஒப்பந்தகள் கையெழுத்தியாகியுள்ளது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு 6 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அரசு முறை பயணமாக நேற்று இந்தியா வந்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு ஜனாதிபதி மாளிகையில் முப்படையினரின் அணிவகுப்புடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்துக்கு சென்ற பெஞ்சமின் நேதன்யாகு அங்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார் இதன்பிறகு, இரு தரப்பினருக்கும் நடுவே உயர்மட்ட பேச்சுவாரத்தை நடைபெற்றது. பின்னர் இரு நாட்டு பிரதமர்கள் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. இரு நா டுகளிடையே 9 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அதன் விபரம்…

1.சைபர் பாதுகாப்பில் கூட்டு செயல்பாடு.
2.பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, எரிசக்தி துறைகளில் கூட்டு செயல்பாடு.
3.விமான போக்குவரத்து ஓப்பந்தம்.
4.கூட்டு திரைப்பட தயாரிப்பு.
5.ஹோமியோபதி மருந்து ஆராய்ச்சிக்கு கூட்டு மருத்துவம மையம்.
6.ஆயுஷ் அமைச்சகத்துடனம் ஒப்பந்தம்.
7. வின்வெளி ஆராய்ச்சியில் இஸ்ரோ&இஸ்ரேல் தொழில்நுடப் மையத்துடன் ஒப்பந்தம்.
8. உலோக&காற்று பேட்டரி துறையில் கூட்டு செயல்பாடு.
9. சூரிய சக்தி தொழில்நுட்ப கூட்டு செயல்பாடு.

இஸ்ரேல் பிரதமருடன் 130 பேர் கொண்ட பிரதிநிதிகள் வருகை புரிந்துள்ளனர். ஆக்ரா, அகமதாபாத், மும்பை ஆகிய இடங்களுக்கு இவர்கள் பயணம் மேற்கொள்கின்றனர். 15 வருட வரலாற்றில் 2003ம் ஆண்டில் ஏரியல் சரோனுக்கு பின், இஸ்ரேல் பிரதமர் இந்தியா வந்துள்ள முதல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு என்பது குறிப்பிடத்தக்கது.