அச்சத்தை அகற்றி அடித்தளம் அமைத்த ரோகித் & ராகுல் ஜோடி!

Must read

கட்டாக்: வெஸ்ட் இண்டீசின் 315 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பயணித்துவரும் இந்திய அணிக்கு அதன் துவக்க ஜோடிகளான ரோகித் – ராகுல் ஜோடி, அச்சத்தை அகற்றி நிலைக்கொண்டு ஆடிவருகின்றனர்.

துவக்கத்திலேயே அதிரடிக்கு மாறத்துவங்கிய இவர்கள், அசால்ட்டாக பவுண்டரிகளை விளாசினர்.

முதலில் அதிரடியைத் துவக்கியது ரோகித் ஷர்மாதான். பின்னர் அவரின் பாதையில் தானும் அதிரடிக்கு மாறிய ராகுல் அரைசதம் அடித்துள்ளார். ரோகித்தும் அரைசதத்தை நெருங்கியுள்ளார்.

ரோகித் ஷர்மா மட்டுமே 1 சிக்ஸர் அடித்திருக்க, ராகுல் இன்னும் தனது சிக்ஸர் கணக்கைத் துவக்கவில்லை. இந்த இணை, 17 ஓவர்கள் முடிவில் இந்திய அணியை 102 ரன்களுக்குக் கொண்டுவந்துள்ளது.

இவர்கள், 315 ரன்களை எட்டுவதற்கான ஒரு வலுவான அடித்தளத்தை அணிக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். கடந்த ஆட்டத்தைப்போல் இருவரும் நிலைத்து நின்று சதமடிப்பார்களா? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

More articles

Latest article