டில்லி

ந்தியாவில் கொரோனா சமூக பரவல் என்னும் தனது கருத்து தவறானது என உலக சுகாதார அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலகில் 200க்கும் மேற்பட்ட நாடுகளை ஆட்டி வைக்கிறது.  இந்தியாவையும் அது விட்டு வைக்கவில்லை,  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 33 பேர் உயிர் இழந்து மொத்த எண்ணிக்கை 244 ஆகி உள்ளது.

உலக சுகாதார அமைப்பு இந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவல் நிலையை அடைந்துள்ளதாகக் கூறி இருந்தது.  இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.  தற்போது நாட்டில் கொரோனா பரவுதல் நிலை இரண்டாம் கட்டத்தில் உள்ளதாகவும் மூன்றாம் நிலை அதாவது சமூக பரவுதல் நிலையை அடையவில்லை எனவும் தெரிவித்தது.

மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இந்தியாவில் சமூக பரவுதல் இல்லை எனத் தெரிவித்தார். மேலும் அவர் கிட்டத்தட்ட 600 மாவட்டங்களில் 400 மாவட்டங்கள் பாதிக்கப்படவில்லை எனவும்134 மாவட்டங்கள் மட்டுமே அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதையொட்டி உலக சுகாதார அமைப்பு இந்தியாவில் கொரோனா சமூக பரவுதல் நிலையை அடைந்ததாகச் சொல்லியதில் தவறு நிகழ்ந்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.  தற்போது இந்தியாவில் கொத்து கொத்தாகப் பரவுதல் உள்ள போதிலும் அது சமூக பரவுதல் நிலையை அடையவில்லை எனவும் கூறி உள்ளது.