இன்று 70வது குடியரசு தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில் கூகுள் நிறுவனம் டூடுள் வெளியிட்டு கவுரவப்படுத்தி உள்ளது.

இந்தியா குடியரசு பெற்ற ஜனவரி 26ந்தேதி ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாட்டில் கூகுள் நிறுவனம் சிறப்பான டூடுளை வெளியிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
இந்தியாவின் அடையாளமான பாரம்பரியமிக்க டில்லி செங்கோட்டை மற்றும் இந்திய கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் அணிவகுப்புகளை பிரதிபலிக்கும் வகையில் டூடுள் வெளியட்டு கவுரவப்படுத்தி உள்ளது.
Patrikai.com official YouTube Channel