டெல்லி: இந்தியாவில் பொருளாதார சீர்த்திருத்தங்களை அறிமுகப்படுத்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நாடு கடன்பட்டுள்ளது என மத்திய பாஜக சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பாராட்டு தெரிவித்து உள்ளர்.

தலைநகர்  டெல்லியில் நடைபெற்ற விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நிகழ்ச்சியில் பேசும்போது, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கை பாராட்டி பேசினார். அவர் பேசும்போது,  ஏழை மக்களுக்கு அதன் பலன்களை வழங்கும் நோக்கத்துடன் தாராளமய பொருளாதார கொள்கை இந்தியாவுக்கு தேவை. தாராளமய பொருளாதாரக் கொள்கை விவசாயிகள் மற்றும் ஏழை மக்களுக்கானது.

இந்தியாவின் பலன்களை ஏழை மக்களுக்கு வழங்கும் நோக்கத்துடன் தாராளமய பொருளாதாரக் கொள்கை தேவை என்று கூறிய கட்கரி  1991ம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக இருந்த மன்மோகன் சிங் தொடங்கிய பொருளாதார சீர்திருத்தங்கள், அது ஒரு தாாளமய பொருளாதாரத்தை தூண்டியதால் இந்தியாவுக்கு புதிய திசையை அளித்தன. மன்மோகன் சிங் முன்னெடுத்த பொருளாதார சீர்த்திருத்தங்களுக்காக நாடு அவருக்கு கடன்பட்டுள்ளது.

1991ஆம் ஆண்டு நிதியமைச்சராக மன்மோகன்சிங் தொடங்கிய பொருளாதார சீர்திருத்தங்கள் இந்தியாவிற்கு ஒரு புதிய திசையை அளித்தது, அது ஒரு தாராளமய பொருளாதாரத்திற்கு வழிவகுத்தது. “தாராளவாத பொருளாதாரம் கே கரன் தேஷ் கோ நயீ திஷா மிலி, உஸ்கே லியே மன்மோகன் சிங் கா தேஷ் ரீனி ஹை (புதிய திசையை வழங்கிய தாராளமயமாக்கலுக்கு நாடு மன்மோகன் சிங்கிற்கு கடன்பட்டுள்ளது)” என்று கட்கரி கூறினார்.

1990 களின் நடுப்பகுதியில் மகாராஷ்டிராவில் அமைச்சராக இருந்தபோது, முன்னாள் பிரதமரால் தொடங்கப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் காரணமாக மகாராஷ்டிராவில் சாலைகள் அமைக்க பணம் திரட்ட முடிந்தது என்று அவர் நினைவு கூர்ந்தார்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மேலும் விரைவுப்படுத்த அதிக மூலதன செலவின முதலீடு தேவைப்படும். இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நெடுஞ்சாலைகள் அமைப்பதற்காக சாமானியர்களிடம் இருந்தும் பணம் திரட்டுகிறது.  நாட்டில் 26 புதிய அதிவேக நெடுஞ்சாலைகளை நிர்மாணிப்பதற்கு அமைச்சகம் பணப் பற்றாக்குறையை எதிர்கொள்ளவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.