டில்லி:
இந்தியா-ஜெர்மனி இடையே 20 ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகி உள்ளதாக தெரிவித்துள்ள ஜெர்மணி பிரதமர் ஏஞ்சலா மெக்கல், தமிழகத்தில் அரசுப் பேருந்துகளை நவீனமயமாக்க ரூ.1580கோடி ஒதுக்கீடு செய்யப்படுவ தாகவும் கூறினார்.
3 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், பிரதமர் மோடி இடையே சந்திப்பு நடைபெற்றது. பேச்சு வார்த்தையின்போது, தமிழகம் மற்றும் உத்தரபிரதேசத்தில் நிறுவப்பட்டுள்ள பாதுகாப்பு தளவாட உற்பத்தி வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலிடம் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
அதையடுத்த இரு தலைவர்கள் முன்னிலையில், விண்வெளி, விமானப் போக்குவரத்து, கடற்சார் தொழில்நுட்பம், மருத்துவம், கல்வி உள்ளிட்ட 11 துறைகளில் 20க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மோடி, 2022-ஆண்டுக்குள் புதிய இந்தியாவை உருவாக்க உறுதி பூண்டி ருப்பதாகவும், உத்தரப்பிரதேசம், தமிழகத்தில் உள்ள பாதுகாப்புத் துறை ஆயுத தளவாட உற்பத்திக்கான ஏராளமான வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள ஜெர்மனிக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
அதைத்தொடர்ந்து பேசிய ஜெர்மனி பிரதமர் ஏஞ்செலா மெர்கல், 5ஜி, செயற்கை நுண்ணறிவு போன்ற சவாலான துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும் என்றார்.
பின்னர் டெல்லியில் வர்த்தக மாநாட்டில் கலந்துகொண்டு மெக்கல் பேசினார். அப்போது, நகர்ப்புறங்களில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத பசுமைப் போக்குவரத்திற்காக, இந்தியாவும் ஜெர்மனியும் கூட்டாக இணைந்து செயல்படுவதாகவும், டெல்லியில் காற்று மாசுபாட்டின் ஆபத்தை உணரும் யாரும், டீசல் பேருந்துகளை கழித்துக்கட்டி விட்டு மின்சார பேருந்துகளை பயன்படுத்துவதன் அவசியத்தை புரிந்துகொள்வார்கள் என்றவர், இதற்காக 1 பில்லியன் டாலர்கள் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக கூறினார்.
மேலும், தமிழகத்தில் அரசுப் பேருந்து களை நவீனமயமாக்க 200 மில்லியன் யூரோக்கள் அதாவது ஆயிரத்து 580 கோடி ரூபாயை ஜெர்மனி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்தார்.