டெல்லி: இந்தியாவுக்கு 4வது டோஸ் கொரோனா தடுப்பூசி தேவையில்லை என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ள நிலையில், உலக சுகாதார நிறுவனமும், . தேவையில்லாமல் கொரோனா குறித்து யாரும் பீதியை பரப்ப வேண்டாம் என தெரிவித்து உள்ளனது. தற்போது 25 கோடி தடுப்பூசி கையிருப்பில் உள்ளதாக மத்தியஅரசு தெரிவித்து உள்ளது.
சீனா, அமெரிக்கா, பிரேசில் உள்பட பல நாடுகளில் ஒமிக்ரான் மாறுபாடான bf.7 உருமாறிய கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால், இந்தியாவில் தொற்று பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பொதுமக்கள் முக்கவசம் அணிவதுடன், சமூக இடைவெளி, அவ்வப்போது கைகளை சுத்தப்படுத்துதல் போன்றவற்றை மேற்கொள்ளவும் மத்தியஅரசு அறிவுறுத்தி உள்ளது. மேலும், விமான நிலையங்களில் கொரோனா சோதனைகளையும் மீண்டும் தொடங்கி உள்ளது.
இதனால் பொதுமக்கள் பீதியடைந்து வருகின்றனர். இந்த நிலையில் உலக சுகாதார நிறுவனமும், கொரோனா குறித்து யாரும் பீதியை ஏற்படுத்த வேண்டாம்”, என தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக கூறிய உலக சுகாதார அமைப்பு நிபுணர்கள், கொரோனா வைரஸ் என்பது சீசனுக்கு வருவது. கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டவருக்கு போதிய சிகிச்சை, மருந்துகள் உள்ளன. புதிய கொரோனா வைரசுக்கு பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை. லாக்டவுன், தனிமைப்படுத்துதல் போன்றவையும் தேவையில்லை. கொரோனாவுக்கு பயப்பட வேண்டாம் என்ற செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். தேவையில்லாமல் கொரோனா குறித்து யாரும் பீதியை பரப்ப வேண்டாம் என தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில், கொரோனா தொற்று பரவாமல் தடுக்க 2 டோஸ் , தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் பூஸ்டர் டோஸ் எடுத்துக்கொள்ளவும், தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்கள் உடனே தடுப்பூசி எடுத்துக்கொள்ளவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
தற்போதைய நிலையில், இந்தியாவில், 90%க்கும் மேற்பட்டோர் 2வது டோஸ் தடுப்பூசியும், 27% பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் போட்டுக்கொண்டுள்ளனர். இந்நிலையில், 2வது டோஸ் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட வேண்டுமா என கேள்வி எழுந்தது. ஆனால், தற்போது தேவையில்லை என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இந்தியாவுக்கு 4வது டோஸ் தேவையில்லை என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சீன மக்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் தான் அங்கு வேகமாக பரவி வருவதாகவும், இந்தியர்களிடையே நோய் எதிர்ப்பு அதிகம் என்பதால், வேகமாக பரவ வாய்ப்பு இல்லை என்றுநும், இயற்கையாகவே வைரஸை எதிர்க்கும் சக்தி நமது நாட்டு மக்களிடம் உருவாகியுள்ளதாகவும் தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில், மத்தியஅரசு, ரூ. 25 கோடி தடுப்பூசி கையிருப்பில் இருப்பதாக தெரிவித்துள்ளது. அதன்படி, பயோலாஜிக்கல் இ மற்றும் பாரத் பயோடெக்கிடம் 25 கோடி bfhரோனா தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பு உள்ளன. இதில் பயோலாஜிக்கல் இ நிறுவனத்திடம் 20 கோடி டோஸ்களும், பாரத் பயோடெக் நிறுவனத்திடம் 5 கோடி டோஸ்களும் உள்ளன. இதுபோக 30 கோடி கார்ப்வேக்ஸ் டோஸ்களை தயாரித்ததில், 10 கோடி டோஸ்களை மத்திய அரசுக்கு வழங்கியது போக, மீதி 20 கோடி டோஸ்கள் கையிருப்பில் இருப்பதாக பயோலாஜிக்கல் இ நிறுவனம் தெரிவித்துள்ளது.