மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 255 ரன்கள் மட்டுமே எடுத்தது.

மொத்தமாக 50 ஓவர்களை ஆடமுடியாமல் கோட்டைவிட்டது இந்தியா.

ரோகித் 10 ரன்களில் நடையைக் கட்டியப் பிறகும் தவான் 74 ரன்களும் ராகுல் 47 ரன்களும் அடித்து ஓரளவு சிறப்பான துவக்கம் தந்தனர். ஆனால், அதை மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்கள் பயன்படுத்தவில்லை.

பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் கோலி வெறும் 16 ரன்களில் ஏமாற்றினார். ஷ்ரேயாஸ் 4 ரன்களுக்கும் ரிஷப் பண்ட் 28 ரன்களுக்கும் பெவிலியன் திரும்பினர். நம்பிக்கையளிப்பார் என்று நின‍ைத்த ஜடேஜழவும் 25 ரன்களே எடுத்தார்.

ஆனால், இந்தியா 230 ரன்களைக்கூட எட்டாது என்று நினைத்த நேரத்தில், பின்வரிசையில் வந்த ஷர்துல் தாகுர் 13 ரன்கள், குல்தீப் யாதவ் 17 ரன்கள் மற்றும் ஷமி 10 ரன்கள் எனப் பங்களித்து, இந்தியாவின் எண்ணிக்கையை 255 என்ற கெளரவமான நிலைக்கு எடுத்துச் சென்றனர்.

ஆனால், இந்த கெளரவ எண்ணிக்கை வெற்றிக்குப் போதுமானதா? என்பது இந்திய பவுலர்களின் கைகளில்தான் இருக்கிறது.

ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ் மற்றும் ரிச்சர்ட்ஸன் தலா 2 விக்கெட்டுகளையும், ஸம்பா கோலியின் விக்கெட்டையும் வீழ்த்தினர்.