பிரிட்டனின் உருமாறிய கொரோனா வைரஸை செயற்கையாக உருவாக்கிய இந்தியா

Must read

டில்லி

பிரிட்டனில் வேகமாகப் பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ் மாதிரியை இந்தியா செயற்கையாகஉருவாக்கி உள்ளதாக இந்திய மருத்துவ ஆய்வுக் குழு அறிவித்துள்ளது,

பொதுவாக புதிய வகை வைரஸ் பரவும் போது அது பற்றிய முழு விவரமும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகிறது.   அவ்வாறு முழு விவரமும் அறிந்த பிறகே அதற்கான தடுப்பூசி, சிகிச்சை முறை ஆகியவற்றைக் கண்டறிய முடியும்.  எனவே அந்த வைரசைப் போலவே உள்ள மற்றொரு வைரஸ் மாதிரி செயற்கையாக உருவாக்கப்படுவது வழக்கமாகும்.

தற்போது பிரிட்டனில் பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ் மாதிரியை எந்த நாடும் உருவாக்காமல் உள்ளது.   இந்த வைரச் முந்தைய கொரோனாவை விட 70% வேகமாகத் தொற்றக்கூடியதாகும்.   பிரிட்டனில் இந்தியாவுக்கு வந்த 29 பேரிடம் இந்த வைரஸ் தொற்று உள்ளது கண்டுபிடிகிகபட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அச்சு அசலாக இதே வைரசை உலக நாடுகளில் முதல் முறையாக இந்தியா உருவாக்கி உள்ளது.  பிரிட்டனில் இருந்து வந்தவர்களில் இந்த உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளைக் கொண்டு செயற்கையாக இந்த வைரஸ் உருவாக்கப்பட்டுள்ளது.   இந்த தகவலை இந்திய மருத்துவ ஆய்வுக் குழு அறிவித்துள்ளது.

More articles

Latest article