டில்லி

டந்த 2 வாரங்களில் கொரோனா பரிசோதனை மற்றும் பாதிப்பு சராசரி விகிதம் 5% ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பரவுதலுக்குத் தடுப்பூசி இன்னும் கண்டுபிடிக்காத நிலையில் ஊரடங்கு, சோதித்தல், தனிமைப்படுத்தல், சிகிச்சை ஆகியவை மட்டுமே பரவுதலைத் தடுக்க வழியாக உள்ளன.   அதையொட்டி கடந்த  சில நாட்களாக நாடெங்கும் பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது.   அதைப்  போல் பரிசோதனையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படும் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக 7 மாநிலங்களில் பரிசோதனை எண்ணிக்கை மற்றும் பாதிப்பு உறுதி விகிதம் மிகவும் அதிகமாக உள்ளன.  மகாராஷ்டிரா, குஜராத், டில்லி, தெலுங்கானா, சண்டிகர், தமிழகம் பீகார் ஆகிய இடங்களில் 100 பேருக்கு பரிசோதனை நடந்தால் பாதிப்பு உறுதியானோர் எண்ணிக்கை 5 ,முதல் 18 ஆக உள்ளன.  இதில் மகாராஷ்டிராவில் அதிகம் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2 வாரங்களில் மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள போபால் மற்றும் இந்தூர் நகரங்களில் 5% பாதிப்பு தற்போது 4% ஆக குறைந்துள்ளது.  இதைப் போல் மேற்கு வங்கத்தில் பாதிப்பு விகிதம் 3% இருந்து 2% ஆகக் குறைந்துள்ளது.  இதைப்போல் பஞ்சாப், ஆந்திரா, காஷ்மீர் மற்றும் அரியானா ஆகிய பகுதிகளிலும் பாதிப்பு உறுதி விகிதம் குறைந்துள்ளது.   இதில் மேற்கு வங்கத்தில் சோத்னைகள் சரிவர நடப்பதில்லை என கூறப்படுகிறது.

அகில இந்திய அளவில் கடந்த 2 வாரங்களில் 11,54,975 பேருக்கு பரிசோதனைகள் நடந்துள்ளன.  அதில் 55,676 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  இது சராசரியாக 5% ஆகி உள்ளது எனக் கூறலாம்.   இதில் கேரளா போன்ற மாநிலங்களில் தொடக்கத்தில் 65% உறுதி  செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது 1%க்கும் குறைவான பாதிப்பு உறுதி ஆவது குறிப்பிடத்தக்கதாகும்.