புதுடெல்லி:
இந்தியாவில்கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,756 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,756 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,46,12,013 இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவால் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,40,54,621- ஆகவும் இருப்பதாகவும், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,28,799-ஆகவும் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel