இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் 3 முறை அறிவிக்கப்பட்ட ஊரடங்கு வரும் 17ந்தேதியுடன் முடிவடைய உள்ளது. ஆனால், தற்போதுதான் தமிழகம், டெல்லி, மகாராஷ்டிரா, உ.பி. மத்தியபிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.
அதேவேளையில் வடகிழக்கு மாநிலங்களில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ளது. இதையடுத்து கடந்த 4ந்தேதி முதல் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி,
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4213 பேருக்கு பாதிப்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்தம் 67,152 பேர்
கடந்த 24 மணி நேரத்தில் 97 பேர் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 2206 ஆக உயர்வு.
இதுவரை 20917 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பில் முதலிடத்தல் மகாராஷ்டிரா உள்ளது. அங்கு 832 பேர் பலியான நிலையில் மொத்தம் 22171 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குஜராத்தில் இதுவரை 8194 பேருக்கும், தமிழகத்தில் 7204 பேருக்கும், டெல்லியில் 6923 பேருக்கும், மத்திய பிரதேசத்தில் 3614 பேருக்கும், ராஜஸ்தானில் 3814 பேருக்கும், உத்தர பிரதேசத்தில் 3467 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.